“I LOVE Wayanad” அதுக்கு நீங்க தான் காரணம்..வயநாடு மக்களை புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி!

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் ராகுல்காந்தியின் "I LOVE Wayanad" என அச்சிடப்பட்டிருந்த டி-ஷர்ட்டை பார்த்து மக்கள் ஆர்ப்பரித்தனர்.

wayanad

கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார்.

“I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி “I LOVE Wayanad” எனப் போட்டிருப்பதை ஆதரவாளர்களுக்குக் காண்பிக்கச்சொன்னார்.

உடனடியாக ராகுல்காந்தியும் திரும்பி கெத்தாக “I LOVE Wayanad” எனக் காட்டிய நிலையில், கரகோஷம் சத்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. பிறகு பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி ” பல வருடங்களாக நான் அரசியலில் காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பதை இன்று விமானத்தில் இருக்கும் போது உணர்ந்தேன்.

வயநாட்டிற்கு வந்த பிறகு திடீரென்று நான் அரசியலில் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தேன். அதற்கு முக்கியமான காரணமே மக்களாக நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். வயநாடு எனக்கு மிகுந்த அன்பையும் பாசத்தையும் கொடுத்தது, எனது முழு அரசியலையும் மாற்றியது.

வயநாட்டில் உள்ள மக்கள் தனக்கு ‘காதலின்’ முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்துள்ளனர். நான் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், வயநாடுக்கு வருவது என்னை நன்றாக உணர வைக்கிறது. இங்கு வந்தால் அந்த வெறுப்புகள் அனைத்தும் போய்விடும். அதற்கு காரணமே மக்களாகிய நீங்கள் தான்.

வெறுப்பு மற்றும் கோபத்தை எதிர்ப்பதற்கான ஒரே ஆயுதம் அன்பு மற்றும் பாசம். நான் இங்கு வரும்போதெல்லாம், நான் இயற்கையாகவே மகிழ்ச்சியாக உணர்கிறேன்” எனவும் வயநாடு தனக்கு இவ்வளவு பிடிக்கும் என ராகுல் காந்தி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna
Kalaignar Centenary Hospital