Categories: இந்தியா

அதானி முறைகேட்டில் தொடர்பா? பிரதமர் விளக்க வேண்டும் – ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 60 தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மும்பை சென்றுள்ளார். அப்போது,  INDIA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதானி குழும முறைகேடுகள் குறித்து புதிதாக வந்துள்ள செய்திகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி கூறியதாவது, சர்வதேச பத்திரிகைகள் இன்று ஒரு முக்கிய பிரச்னையை மையப்படுத்தி எழுதியிருக்கின்றன.  பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் குழும ஊழல்கள் பற்றி சர்வதேச நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை பாதிக்கக்கூடிய ஒன்று. பிரதமருக்கும், அதானிக்கும் இருக்கும் தொடர்பை 2 பிரபல பத்திரிகைகள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவின் சொத்துக்களை வாங்க அதானிக்கு எப்படி பணம் வருகிறது?, அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது?, இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதை அனுமதித்தது யார்?, அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்?, அதானி மீதான குற்றசாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? என பல கேள்விகளை எழுப்பினார்.

அதானி குழுமத்தின் முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு சாதகமாக உள்ளது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிக்காட்டியுள்ளது. நாட்டில் பொருளாதாரம் மற்றும் வணிகம் உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும், இது எப்படி? என்றுள்ளார்.

மேலும், அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் விளக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி பிரதமரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது என அதானி குழுமம் முறைகேடு செய்ததாக சர்வதேச பத்திரிகையில் வெளிவந்த அறிக்கையின் அடிப்டையில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

மேலும் ராகுல் பேசுகையில், இந்திய தொழில் நிறுவனங்கள் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது. ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அதானி முறையீடு குறித்து கேள்வி எழுப்புவேன் என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…

37 minutes ago

ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…

1 hour ago

தெலுங்கானா விபத்து : லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!

தெலுங்கானா :  மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…

2 hours ago

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

2 hours ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

2 hours ago

பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்

டெல்லி  : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025  கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…

3 hours ago