நந்திகிராமில் விதிமீறல்.., நீதிமன்றத்தை நாடுவோம்- மம்தா..!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் தேர்தல் நடைபெற்றவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம்தேதி நடைபெற்றது. இதில், 80 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்நிலையில், இன்று 30 தொகுதிகளுக்கு 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்த 30 தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் உள்ளது.
இதையெடுத்து, நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது, உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர். பின்னர், வாக்கு சாவடிக்கு வெளியே ஆளுநருக்கு மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் விதிமீறல்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் குண்டர்களால் மேற்குவங்கத்தில் அமைதி பாதிக்கும் அபாயம் என தெரிவித்தார்.
விதி மீறல் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நடுவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.