IRCTC இணையதளம் முடக்கம்! இந்த செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்!

IRCTC website

அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்.

ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் திடீரென முடங்கியது. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியுள்ளதாக IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. தொழில்நுட்பக்குழு இந்த பிரச்சனையை தீர்த்து வருவதாகவும், விரைவில் இதனை சரிசெய்துவிட்டு பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் என தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், IRCTC இணையதளம் சரி செய்யப்படும் வரை, Make my trip, Amazon போன்ற இணையதளங்கள் / செயலிகள் மூலமாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப காரணங்களால், IRCTC தளம் மற்றும் செயலியில் டிக்கெட் சேவை இன்னும் சரி செய்யப்படவில்லை. தொழில்நுட்பக்கோளாறை, தொழில்நுட்பக் குழு சரி செய்து வருகிறது. இதற்கு மாற்றமாக அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்