3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் கல்லா கட்டிய ரயில்வேத் துறை.! எப்படி தெரியுமா.?
IRCTC : இந்தியன் ரயில்வேயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து அதனை பயண நேரத்தின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் , நேரத்திற்கு தகுந்தாற்போல அதன் சேவை (அபராத) கட்டணம் வசூல் செய்யப்பட்டு மீதம் உள்ள டிக்கெட் பணம் பயனர்களுக்கு திரும்பி தரப்படும். அப்படி வசூலித்த சேவை கட்டணம் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் 1,229 கோடியாக உள்ளதாம்.
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் இதனை கேட்டுள்ளார். அதன் மூலம் கிடைத்த தகவலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Read More – இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!
அந்த தகவலின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024 ஜனவரி மாதம் வரையில் மட்டுமே 1229 கோடி ரூபாய் ரயில்வே டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில், சுமார் 2.53 கோடி பேரின் டிக்கெட்டிகள் ரத்து செய்யப்பட்டதில் இந்திய ரயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அடுத்த ஆண்டு 2022இல், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4.6 கோடியாக உயர்ந்தது, இதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.439.16 கோடியாக உள்ளது. 2023ஆம் ஆண்டில், 5.26 கோடி பேரின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ரூ.505 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2024 ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் பேரின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மொத்தத்தில் 12.8 கோடிக்கும் அதிகமானோரின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.
Read More – பிப்ரவரில் 86.15 லட்சம் பேர் பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!
டிக்கெட் பயணத்தின் வகுப்பு மற்றும் ரயில் புறப்படுவதற்கான நேரம் ஆகியவற்றை பொறுத்து ரத்து கட்டணங்கள் மாறுபடும். ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிசெய்யப்பட்ட 2ஆம் வகுப்பு டிக்கெட்டை ரத்துசெய்வதற்கு 60 ரூபாய்சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதில் ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.120 முதல் ரூ.240 வரை வசூல் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு கட்டணமும் அபராத தொகை இன்றி முழுவதும் திருப்பி அளிக்கப்படும்.