ஐஆர்சிடிசி இணையதளம் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கவேண்டும் – பியூஷ் கோயல்

ஐஆர்சிடிசி இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்த பியூஷ் கோயல்,பயனர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ரயில்வே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணயதளம் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் மற்றும் ஆர்சிடிசி ஆகிவற்றை சேர்ந்த அதிகாரிகள், இணைய தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று பியூஷ் கோயலிடம் உறுதி அளித்தனர்.
2014-ஆம் ஆண்டு முதல் ஐஆர்சிடிசி இணைய தளத்தின் சேவைகளை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025