ஈரான் அதிபர் ரைசி மரணம்- இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
சென்னை : ஈரான் அதிபர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.
வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் அவர்களுடைய ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலகே உலுக்கி இருக்கும் நிலையில், இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்தும் இருந்தார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (மே 21) நாடு முழுவதும் அனைத்துக் கட்டடங்களில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.