ஐபிஎஸ் அதிகாரி சத்ருஜீத் சிங் கபூர் ஹரியானா டிஜிபி ஆக நியமனம்..!
ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி சத்ருஜீத் சிங் கபூர் ஹரியானா காவல்துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னதாக மத்திய புலனாய்வு அமைப்பில் (சிபிஐ) பணிபுரிந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய பிகே அகர்வால், நேற்று ஓய்வு பெற்ற நிலையில் சத்ருஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நூஹில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறைந்து, நிலைமை சீரடைந்து வருவதாக அகர்வால் அறிக்கை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.