IPL 2018: பஞ்சாப் அணியை பதற வைத்து பட்டைய கிளப்பிய பெங்களுரு அணி !டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் !!
இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது.முதலாவது களமிறங்கிய பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 155 ரன்களை எடுத்து அணைத்து விக்கெட்டுகளை இழந்தது.
156 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்கலம் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார் .அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி 21 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் .
டிகாக் அரைசதம் எட்டும் முன்பு ஆட்டம் இழந்தார்.அவரை அடுத்து களமிறங்கிய காண் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார் .அரை சதம் எட்டிய நிலையில் டிவில்லிர்ஸ் ஆட்டம் இழந்தார்.அதே ஓவரில் மந்தீப் ரன் அவுட் செய்யப்பட்டார் .
நான்கு விக்கெட்டு வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களுரு அணி.
19.3 ஓவரில் இலக்கை எட்டி தனது சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடியது பெங்களுரு அணி.