IPL 2018:சென்னை அணியை விடாது துரத்தும் தண்ணீல கண்டம்!சென்னை அணியின் போட்டிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த மும்பை உயர்நீதிமன்றம் தடை!
புனேவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, பவானா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியை புனேவிற்கு மற்றம் செய்தது ஐபிஎல் நிர்வாகம்.கடந்த 10 ம் தேதி நடந்த போட்டியில் தமிழக மக்கள் செய்த போராட்டத்தாலும், மைதானத்தில் காலணிகளை விசியதாலும் வீரர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்து போட்டியினை மாற்றியது ஐபிஎல் நிர்வாகம்.
இந்நிலையில் தற்போது புனேயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட போட்டிகள் அங்கு நடப்பதில் புதிய சிக்கல் உருவானது. புனேயில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால் மைதானத்திற்கு தேவையான நீரினை மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்வதில் சிக்கல் உருவாகியிருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் புனேவில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது மைதானத்திற்கு தேவையான நீரினை எப்படி கொடுப்பீர்கள் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று அதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தை பராமரிக்க தேவையான நீரினை பாவனா அணையில் எடுத்துவந்து மைதானம் பராமாிக்கப் படும். இதற்கு மாநில அரசிடம் சம்மதம் பெறப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நீரினை ஒருபோதும் மைதானத்திற்கு பயன்படுத்த மாட்டோம்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனேவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, பவானா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனே-க்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் புனேவில் நடைபெறும் சென்னை அணியின் போட்டிகளுக்கு பாவனா அணையில் நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.