IPL 2018:சூப்பர் கிங்க்ஸ்யை வீழ்த்தியது கிங்க்ஸ் XI பஞ்சாப் !பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு !

Default Image

இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

அடுத்து 198 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா வாட்சன் மற்றும் விஜய் களமிறங்கினர்.

ராய்டு தனது அரை சதத்தை எட்டும் தருவாயில் 49 ரன்களில் ஆட்டம் இழந்தார் .வாட்சன்  12 ரன்களிலும் ,விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஜடஜா 19 ரன்களில்  ஆட்டம் இழந்தார் .கேப்டன் தோணி 79 ரன்களை குவித்தும் தோல்வியை எட்டியது சூப்பர் கிங்க்ஸ் அணி .

கிங்க்ஸ் XI பஞ்சாப் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

இதன்மூலம் புள்ளிகளின் பட்டியலில் சென்னை அணி 2 வது இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு பின்வாங்கியது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்