அந்த சட்டப்பிரிவு இப்போது இல்லை.. குறிப்பிட்ட அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி.! உச்சநீதிமன்றம் அதிரடி.!  

Default Image

IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. அதனனால் அச்சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் சட்டம் 66Aயின்படி இணையத்தில் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பதிவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும், அபராதம் விதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டது.

ஆனால், இந்த IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும், அதற்கு முந்தைய காலத்தில் பதியப்பட்ட வழக்குகளுக்கு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து PUCL எனும் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.   அதன்படி, ‘ பிரிவு 66A இன் கீழ், இணையத்தில் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை பதிவிடும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம். எனும் சட்டம் இப்போது நடைமுறையில் இல்லை எனவும்,

அதனால், அந்த பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது பதியப்பட்ட மற்ற வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் மீதான வழக்கு விசாரணை தொடரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்