அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் தானாக சரணடைய மனு! நாளை மதியம் உத்தரவு
அமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை நாளை மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறைக்கு தொடர்பான வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை மறுத்த நிலையில் , அமலாக்கத்துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இதனை நீதிபதி அஜய் குமார் என்பவர் விசாரித்தார்.இதில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.அவர் வாதிடுகையில், சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.சிதம்பரத்தை உரிய நேரத்தில் காவலில் எடுத்து விசாரிப்போம் என்று வாதிட்டார்.
மேலும் சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்,குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அஜய் குமார்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.