சிதம்பரம் ஜாமீன் மனு – நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.முதலில் இவரை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.பின்னர் சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.அந்த மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் இன்றைய விசாரணையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.