ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டில்லியிலுள்ள திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .பின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் கார்த்தி சிதம்பரம்.அதேபோல் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.அதாவது வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் நிலையில் அமலாக்கத்துறை அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…