ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Image result for inx media case

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டில்லியிலுள்ள திகார் சிறையில்   கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .பின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்  ஜாமின் வழங்கிய நிலையில், திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் கார்த்தி சிதம்பரம்.அதேபோல் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில்  சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.அதாவது வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் நிலையில் அமலாக்கத்துறை அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்