ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை  ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான  சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில்  உள்ளார்.முதலில் இவரை சிபிஐ கைது செய்த நிலையில் சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதேவேளையில் அமலாக்கத்துறையில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம்  டெல்லி உயர்நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனால் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இன்று அந்த மீதான விசாரணை நடைபெற்ற  நிலையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்