ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தொடக்கம்
சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.கார்த்தி சிதம்பரம், ஆடிட்டருக்கு ஜாமீன் வழங்கியது போல் சிதம்பரத்திற்கு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் .மேலும் ஜாமீன் வழங்கினால் சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்வார் என சிபிஐ கூறுவதை ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.