இன்றுடன் சிபிஐ காவல் முடிவடையவுள்ள நிலையில் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடையில் தான் கடந்த 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்படுகிறார். சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் சிதம்பரத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…