ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

Default Image

இன்றுடன் சிபிஐ காவல் முடிவடையவுள்ள நிலையில் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு இடையில் தான் கடந்த 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி  வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்படுகிறார். சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் சிதம்பரத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்