ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனு தள்ளிவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில்,பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தது தொடர்பாக சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு மனு வந்த நிலையில் . ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . மேலும் வழக்கு விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025