ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கு : சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்து விசாரணை செய்து வருகிறது .இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிய உள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கில் ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. நீதிமன்ற உத்தரவின் படி சீலிடப்பட்ட கவரில், விசாரணை விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்