ராமர் கோயில் விழாவிற்கு முஸ்லிம் வழக்கறிஞர் அன்சாரிக்கு அழைப்பு.!
அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு அழைப்பு.
அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழா மேடையில் பிரதமர் உட்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு 175 பேருக்கு அழைப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் வழக்குத் தொடுப்பவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி ஆகஸ்ட்-5 ம் தேதி விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது.
நியூஸ்- 18 உடன் பேசிய அவர், “பிரதமர் ராம் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்ட வருவதால் அவரை வரவேற்கிறேன். இந்துக்களின் புனித நூலான ராம்சரித்மநாஸின் புத்தகத்தை அவருக்கு வழங்குவேன் என்றார்.
யோத்தியில் எந்தவொரு மதத்திற்கும் எதிராக யாரிடமும் எந்தவிதமான தவறான உணர்வும் இல்லை என்று கூறிய அவர், இங்கு அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்படுகின்றன என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,”அது ராமரின் விருப்பமாக இருக்கலாம் அதனால்தான் நான் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார். அயோத்தியில் வசிக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.
இதற்கிடையில், ராம் கோயிலின் ‘பூமி பூஜன்’ விழாவை முன்னிட்டு ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அங்கு இனிப்புகளை அனுப்பவும் அயோத்தியிலும் விநியோகிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.