Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க கர்நாடகாவின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை விடியோவாக எடுத்து வைத்ததாக அவர் மீது குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பிரஜ்வல் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீது, அதிகமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், பாலியல் ரீதியில் துன்புறுத்தல், பெண்ணை மானபங்கபடுத்தும் நோக்கில் தாக்குதல், பெண்ணை நிர்வாணபடுத்துதல், வீடீயோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்து அவர் தேடப்பட்டு வந்த நிலையில், பிரஜ்வல் ஜெர்மனி தப்பி சென்றது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரியவந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவிடம் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் எனப்படும் விசா முறை தேவைப்படாத சிறப்பு பாஸ்போர்ட் இருந்ததாகவும், அதனை வைத்து கொண்டு பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி சென்றதாக கூறபடுகிறது.
அவர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க முன்வர வேண்டும் என்றும், அவ்வாறு வரும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பை கர்நாடகா அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க ஏற்கனவே லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பிய நிலையில், தற்போது, சிங்கம்-2 படத்தில் கதாநாயகன் சூர்யா, தப்பிச்சென்ற வில்லனை பிடிக்க வெளிநாடு செல்வது போல, பிரஜ்வலை பிடிக்க ஜெர்மனி செல்ல கர்நாடக சிறப்பு விசாரணை குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…