புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்.!
மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருக்கும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் அமித் காரே தெரிவித்தார். அதில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் எனவும் என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும், பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும் எனவும் சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்றைய புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.