மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான சிறப்புப் பேருந்துகள் அறிமுகம்.!
மகளிர் தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் பெண்களுக்கான சிறப்புப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (TSRTC) மகளிர் பயணிகளுக்காக தினசரி சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் மாணவர்கள் மற்றும் மகளிர்களுக்கான தினசரி சிறப்பு பேருந்துகள், ஹைதராபாத் புறநகரில் இருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
இது குறித்து தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (TSRTC) நிர்வாக இயக்குனர் VC சஜ்ஜனார், கூறும்போது பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு இந்த சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
பேருந்துகள் உப்பலில் இருந்து காட்கேசர் வழியாக போகரம், போகரம் முதல் காட்கேசர் வழியாக செகந்திராபாத், எல்பி நகரில் இருந்து இப்ராஹிம்பட்டினம் மற்றும் இப்ராஹிம்பட்டினத்தில் இருந்து எல்பி நகர் வரை சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குருநானக் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சிறப்பு பேருந்து சேவைகளும் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.