வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ சேவை (Unified Payments Interface) மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் தற்போது மொரிஷியஸ் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் இணைந்து, இரு நாடுகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக ரூபே (Rupay) கார்டு சேவையும் மற்றும் யுபிஐ சேவையையும் தொடங்கி வைத்தனர். காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்வில், யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, இந்தியாவில் உள்ள மொரீஷியஸ் தூதர் மற்றும் உயர் ஆணையரான ஹேமண்டோயல் தில்லும் கூறியதாவது, பிரதமர் மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் இணைந்து, விர்ச்சுவல் ரூபே மற்றும் யுபிஐ சேவையை தொடங்கி வைத்தனர். தற்போதுள்ள வலுவாக இருக்கும் இருதரப்பு உறவுகளில் மற்றொரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது.
ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!
கடந்தாண்டு புதுதில்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் போது, UPI குறித்து இரு பிரதமர்களும் விரிவாக விவாதித்தனர். ரிசர்வ் வங்கிக்கும் மொரிஷியஸ் வங்கிக்கும் இடையே குறுகிய காலப் பேச்சுவார்த்தை நடந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இது பிரதமர் மோடியின் கொள்கையை அண்டை நாடுகளில் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கலாச்சார உறவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் இப்போது அது டிஜிட்டல் இணைப்புடனான நமது உறவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது., எனவே மொரிஷியஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டவர்களும் இந்த சேவையால் பெரிதும் பயனடைவார்கள், பணம் செலுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தனது நாடு ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதாகவும், மொரீஷியஸுக்கு சுமார் 100,000 இந்தியர்கள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதனிடையே, இலங்கையிலும் யுபிஐ சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…