ஒமிக்ரானை இரண்டு மணி நேரத்தில் கண்டறியும் புதிய டெஸ்டிங் கிட் அறிமுகம் – ஐ.சி.எம்.ஆர்
ஒமைக்ரானை இரண்டு மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை அறிமுகம் செய்த ஐ.சி.எம்.ஆர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்த நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு மணி நேரத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை கண்டறியும் புதிய பரிசோதனை டெஸ்டிங் கிட்டை ஐ.சி.எம்.ஆர் அறிமுகம் செய்துள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர் ஆய்வகத்தில் இந்த புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.