வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!

Default Image

வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்.

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில், நாம் அனைத்து விடயங்களையும், நமது கைகளில் உள்ள தொலைபேசி வாயிலாகவே புரிந்து கொள்ளலாம். அந்த வகையில், தற்போது, நாடு முழுவதும் ஏற்படும் வானிலை மாற்றங்களை  எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் மவுசம் என்ற புதிய செயலியை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி மூலம் வானிலை முன்னறிவிப்புகளையும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும் ரேடார் அடிப்படையிலான கணிப்புகளையும் தருகிறது. இந்த செயலியானது, புவி அறிவியல் அமைச்சகம் தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த மவுசம் செயலியானது, நாட்டின் 200 நகரங்களுக்கு தற்போதைய வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை ஆகிய சேவைகளை செயலி வழங்குகிறது.  மேலும், இதில் தகவல்கள் ஒரு நாளைக்கு 8 முறை புதுப்பிக்கப்படுகிறது. அடுத்த 5 நாட்களுக்கு நடைபெறும்  எந்தவொரு தீவிரமான வானிலை நிகழ்வுகளையும் பயனர்களுக்கு எச்சரிக்கும் வகையில் வண்ண குறியீட்டில் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு நாளைக்கு இரண்டு முறை எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்