உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பெயரில் டீ தூள் அறிமுகம்!

அஸ்ஸாமைச் சேர்ந்த அரோமிகா டீ என்ற தேயிலை நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( ZELENSKYY) பெயரில் டீயை அறிமுகம் செய்துள்ளது. துணிச்சலான ஜெலென்ஸ்கி தங்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் அதனால்தான் அவருக்குப் பெயர் சூட்டப்பட்டதாகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பருவா கூறுகிறார்.
உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க வாய்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலெஸ்ன்கி நிராகரித்தார். அவரது தைரியத்திற்காக நாங்கள் தேநீருக்கு அவரது பெயரை வைத்தோம். ‘ஜெலென்ஸ்கி’ கடந்த புதன்கிழமை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதாக அரோமிகா டீ இயக்குநர் ரஞ்சித் பருவா தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கி தற்போது உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய செய்திகள் மீது மக்கள் மத்தியில் ஒரு மோகம் உள்ளது. அந்த மோகத்தை பணமாக்குவதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டதா என சில நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025