புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்கிறது உபர்..! பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்டதா.?

Default Image

 

தனது ஓட்டுநர்களின் சவாரியை எளிதாக்கும் வகையில், பயண பகிர்வு நிறுவனமான Uber  தனது புதிய ஓட்டுநர் அப்ளிகேஷனின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது.    தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கணமும், மிகவும் எளிதாகவும் தனித்துவமான அனுபவம் கொண்டதாகவும்,  அமையும் வகையில், இந்த புதிய அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூவைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் 100 பங்காளர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு, இந்த அப்ளிகேஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிளாக் ஒன்றில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் கூறியிருப்பதாவது: பல மாதங்களாக நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் நேர்காணல்களுக்கு பிறகு, உலகமெங்கும் உள்ள ஓட்டுநர்களுக்கான இந்த அப்ளிகேஷனின் பீட்டா பதிப்பை நாங்கள் வெளியிட்டுள்ளோம். எங்கள் அணியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பயணித்தல் மற்றும் பிற ஓட்டுநர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் என்று எங்களால் திரட்ட முடிந்த ஒவ்வொரு சிறிய கருத்துக்களையும் ஒன்றிணைத்து, இந்த நிகழ்ச்சியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதற்காக ஓட்டுநர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரடியாக குறுஞ்செய்திகளின் மூலம் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நான்கு மாதங்களுக்கு பிறகு, 1 லட்சம் சவாரிகளைக் கடந்து, ஆயிரக்கணக்கான உரையாடல்கள் மற்றும் பல்வேறு பிழைகள் பதிவு செய்யப்பட்டன (அவை சீரமைக்கப்பட்டன!).

அடுத்த சில மாதங்களில் நாடெங்கிலும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் பட்டுவாடா பங்காளர்களுடன் படிப்படியாக அது விரிவுபடுத்தப்பட்ட உள்ளது. இது குறித்து உபர் இந்தியா மற்றும் எஸ்ஏ, முக்கிய செயல்பாடுகளின் தலைவரான பிரதீப் பரமேஸ்வரன் கூறுகையில், “இந்த புதிய பங்காளர் (ஓட்டுநர்கள் மற்றும் கொரியர் பங்காளர்கள்) அப்ளிகேஷனின் அறிமுகம் என்பது, உபர் நிறுவனத்தின் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

எங்கள் வளர்ச்சியில் பங்காளர்களாக இருந்த மக்களுக்கான சேவையில் எங்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை, இது பிரதிபலித்து காட்டுவதாக உள்ளது. அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, வடிவமைப்பில் அவர்களை உட்படுத்தி, இந்த அப்ளிகேஷனை நாங்கள் கட்டமைத்துள்ளோம்.

சர்வதேச அளவிலான பீட்டா அறிமுகத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரூவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பங்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். எங்கள் அணிகள் அடிமட்ட அளவில் நேரத்தை செலவிட்டு, குழு அமர்வுகள் மூலம் பங்காளர்கள் உடன் தொடர்பை ஏற்படுத்துதல், சவாரிகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் ஆகியவை மூலம் கருத்துகளைச் சேகரித்துள்ளனர். அவர்கள் அளித்த கருத்துக்களின் ஒவ்வொரு பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

தங்கள் தேவைகளும், பயணங்களின் ஒவ்வொரு கட்டத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அப்ளிகேஷனைக் கட்டியமைப்பதில் அவை உறுதுணையாக இருந்துள்ளது” என்றார்.

இந்த அம்சத்தின் மூலம் அடுத்து வரவுள்ள வருமானத்திற்கான வாய்ப்புகள், தங்கள் பயணிகளின் கருத்துகள் மற்றும் தங்கள் கணக்கு குறித்த தகவல் போன்ற செய்திகளை ஓட்டுநர்கள் காண முடியும். ஓட்டுநர் சுயவிவரம்: உமரை தவிர, தாங்கள் செய்யும் பிற காரியங்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஓட்டுநர்களுக்கு இது வாய்ப்பை அளிக்கிறது.

தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் ஓட்டுநரைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்ளவும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான புதிய வழியாகவும், பயணிகள் இதைப் பயன்படுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்