மிரட்டும் கொரோனா – பள்ளிகளுக்கு விடுமுறை
சத்திஸ்கர், பிஹாரில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் திரையரங்கள் மூடப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பே கேரளா மாநிலம் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தத நிலையில், தற்போது மேலும் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மேலும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.