25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் இணைய சேவை தொடங்கியது – ரமேஷ் போக்ரியால்
இன்று 74-வது சுகந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் இணைய சேவை தொடங்கப்பட்டது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக கூறினார். உலகில் இணைய தளங்கள் மூலம் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் அரசு
இந்தியாவின் கிராமங்கள் தோறும் அதிவேக இணைய சேவையை கொண்டு செல்ல மிகவும் கடினமாக உழைத்து வருவதாக கூறியுள்ளார். மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் வர்த்தகம், ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
On this day, 25 years ago, commercial internet was launched in India. Today, with more than half a billion users, we are one of the fastest-growing & biggest internet economies in the world. #25YearsOfIndiaInternet#AatmaNirbharBharat
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 15, 2020