நாகாலாந்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது…!
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் மோன் மாவட்டத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு அபோகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பிக்-அப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் மோன் மாவட்டத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது.