விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்று ஹரியானாவின் சில பகுதிகளில் மாலை 5 மணி வரை இணைய சேவைகள் ரத்து செய்யபடுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தொடரக்கூடிய இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விவசாயிகள் அவ்வப்போது பல்வேறு விதமான போராட்டங்களையும் கையிலெடுத்து வருகின்றனர். அகிம்சை நிலையில் நடந்து வந்த இந்த போராட்டம் தற்போது சில மோதல்களில் முடிவடைந்துள்ள நிலையில் ஹரியானா முழுவதும் பல இடங்களில் இணைய சேவைகளை ஹரியானா அரசு முடக்கி வைத்துள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணி வரை அம்பாலா, யமுனநகர், குருக்ஷேத்ரா, கர்னல், கைதால், பானிபட், ஹிசார், ஜிந்த், ரோஹ்தக், பிவானி, சர்கி தாத்ரி, ஃபதேஹாபாத், ரேவாரி மற்றும் சிர்சா ஆகிய பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று இதே போல ஹரியானாவின் சில மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. குடியரசு தினத்தில் இருந்து மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் இணைய சேவை மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…