இன்று மாலை 5 மணி வரை ஹரியானாவின் சில பகுதிகளில் இணைய சேவை ரத்து!

Default Image

விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்று ஹரியானாவின் சில பகுதிகளில் மாலை 5 மணி வரை இணைய சேவைகள் ரத்து செய்யபடுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட  இரண்டு மாதங்களாக தொடரக்கூடிய இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விவசாயிகள் அவ்வப்போது பல்வேறு விதமான போராட்டங்களையும் கையிலெடுத்து வருகின்றனர். அகிம்சை நிலையில் நடந்து வந்த இந்த போராட்டம் தற்போது சில மோதல்களில் முடிவடைந்துள்ள நிலையில் ஹரியானா முழுவதும் பல இடங்களில் இணைய சேவைகளை ஹரியானா அரசு முடக்கி வைத்துள்ளது.

அதன்படி இன்று மாலை 5 மணி வரை அம்பாலா, யமுனநகர், குருக்ஷேத்ரா, கர்னல், கைதால், பானிபட், ஹிசார், ஜிந்த், ரோஹ்தக், பிவானி, சர்கி தாத்ரி, ஃபதேஹாபாத், ரேவாரி மற்றும் சிர்சா ஆகிய பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று இதே போல ஹரியானாவின் சில மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. குடியரசு தினத்தில் இருந்து மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் இணைய சேவை மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்