தடுப்பூசிக்கு இணைய பதிவு மட்டும் போதாது…! தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்..! – ராகுல் காந்தி
- தடுப்பூசிக்கு இணைய பதிவு போதாது என ராகுல் காந்தி ட்வீட்.
- தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது, சில தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தடுப்பூசி குறித்தும், கொரோனா பரவலை மத்திய அரசு கையாளும் விதம் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தடுப்பூசிக்கு இணைய பதிவு மட்டும் போதாது. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.
वैक्सीन के लिए सिर्फ़ online रेजिस्ट्रेशन काफ़ी नहीं। वैक्सीन सेंटर पर walk-in करने वाले हर व्यक्ति को टीका मिलना चाहिए।
जीवन का अधिकार उनका भी है जिनके पास इंटर्नेट नहीं है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 10, 2021