மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இணையமைச்சர் எல்.முருகன்!
மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் இருந்து மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வாகிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எல் முருகன் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.