2020-ல் “8,927” மணி நேரம் தடைபட்ட இணையதளம்.. நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

Default Image

இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்தம் 2.8 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாக “internetshutdowns.in” என்ற வலைத்தளம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 75 முறை இணையதள சேவைகளை நிறுத்தியதால், நாட்டில் 8,927 மணி நேரம் இணையதள தடை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் மொத்தம் 2.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி, ரூ.20,500 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வருடத்தில் 75 முறை இணையசேவையை நிறுத்துவது என்பது, உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதகாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 27,165 மணி நேரம் இணையதள சேவை தடைபட்டுள்ளதாகவும், இது 2019-ம் ஆண்டை விட 49 சதவீதம் அதிகம் எனவும், இதில் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 213 நாட்களாக இணையதள சேவை தடைபட்டுள்ளதாக அந்த வலைத்தளம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்