சர்வதேச யோகா தினம்: 180க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது… பிரதமர் மோடி பெருமிதம்.!
9 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்று மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மாலை 5:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக கூறினார்.
மேலும் இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த யோகா தினத்தில் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. கடந்த 2014 இல் யோகா தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுக்கு எண்ணற்ற நாடுகள் தங்களது ஆதரவை வழங்கினர் என்று மோடி தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டார்.
ஓஷன் ரிங் ஆஃப் யோகா பற்றி பேசிய பிரதமர் மோடி, ‘ஓஷன் ரிங் ஆஃப் யோகா’ இந்த ஆண்டு யோகா தின நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது. வளைந்து கொடுக்கும் தன்மை, வலிமை, சமநிலை மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தும் திறன் காரணமாக உலகம் முழுவதும் யோகா புகழ் பெற்றதாக மோடி கூறினார்.
இந்த ஆண்டு யோகா தினத்தில் கருப்பொருளாக ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்’ என்ற வடிவத்தில் அனைவரின் நலனுக்கான யோகா, அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச் செல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.யோகா மனநலப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நன்மை பயக்கும் எனவும் வழக்கமான யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Sharing my message on International Day of Yoga. https://t.co/4tGLQ7Jolo
— Narendra Modi (@narendramodi) June 21, 2023