மகளிர் தினம் கொண்டாடும் மனமே..ஒரு நிமிடம்… 2.40 லட்சம் போக்சோ வழக்குகள்..என்ன சொல்கிறது மனம்?

Default Image

உலகம் முழுவதும் ஓய்வின்றி தன்னலம் பார்க்காமல் உழைக்கும் சாதனை சக்திகளின் தினமாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்ற கவிமணியின் வரிகளுக்கு சிறப்பை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.சக்தி என்றே பெண்களை அழைக்கின்றனர்.

Image result for மகளிர் தினம்

சக்தி என்பது ஆற்றல் அது தான் அனைத்திற்கும் மூலதனம் என்பதை அறிந்த நாம் அந்த கண்மனிகளை கவனித்தது உண்டா இல்லத்திலும் சரி உள்ளத்திலும் இங்கு பெண்ணிற்கு சாதகமாக எழுதவில்லை உள்ளத்தில் எழுவதை தான் எழுதுகிறேன் ஒரு வலைதளத்தில் படித்தேன் 6நாட்கள் வெளியில் வேலைபார்த்த ஆண் ஒருநாள் வீட்டில் ஓய்வு எடுக்க ஆசை கொள்கிறான்.6 நாட்கள் வீட்டிலேயே இருக்கும் பெண் ஒருநாள் வெளியே செல்ல ஆசை கொள்கிறார் என்ற அந்த வரிகள் அனைத்தையும் சுட்டிக்காட்டியது.இன்று சூழல் எத்தனையோ  மகளிருக்காக மாறியுள்ளது உண்மை தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்றாலும் ஒன்று மட்டும் இன்று வரை மாறாமல் வேதனை அளித்து வருகிறதே?

Image result for மகளிர் தினம்

நான் எதை கூற வருகிறேன் என்று உள்ளம் உணர்த்தி இருக்கும் தானே? அதே தான் நம் நாட்டில் பாலியல் சீண்டல் அதிகரித்து வருவது தான் பெற்றோர் மத்தியிலும் மகளிர் மீது பதியப்படும் பார்வை குறித்த அனுகுமுறை குறித்த கேள்விகள் குறிவைக்கப்படுகின்றன.

Image result for மகளிர் தினம்

மனிதன் ஒரு விலங்கு தான் ஆனால் அறிவு என்னவோ 6 என்பதை மறந்து விடுகிறோமோ என்ற ஐயப்பாடு எழுகிறது என்று பெண்ணியவாதிகளின் விமர்சன குமுறல்கள் காதை கிழிக்கின்றன .

Image result for பாலியல் சீண்டல்

தினமும் ஒரு பாலியல் சீண்டல்,குழந்தை ,மாணவிகள், இளம் பெண்கள், மூதாட்டி என இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் இதனை பார்க்கும் போது வெறும் வார்த்தைகளால் பூசப்பட்டு மகளிர் தின கொண்டாடி கொண்டிருக்ககிறோமோ என்ற  கேள்வி ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தையும் உலுக்கி கொண்டிருக்கின்ற இந்த வேளையில் நாடு முழுக்க 2 லட்சத்து 40 ஆயிரம் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சியை தருகிறது.

Image result for பாலியல் சீண்டல்

மக்களவை சட்டத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமான அறிக்கையை  நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்துள்ளது. அதன்படி கடந்தாண்டு டிசம்பர் இறுதிவரை நாட்டில் 240,000 போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போக்சோ வழக்குகளுக்காக ஒரு சிறப்பு நீதிமன்றம் கூட இதுவரை  அமைக்கப்படவில்லை .

Image result for பாலியல் சீண்டல்

தமிழகத்தில் பாலியல் மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்க 14 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஆனால் பதியப்பட்ட போக்சோ வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு காற்றில் பறக்க விடப்படுவதாக விமர்சனங்களும் உடன் பறக்கிறது.

Image result for father

ஒருசுவர் உள்ளது அது முழுக்க வெள்ளை வண்ணம் பூசப்பட்டு மிக அழகாக கம்பீரமாக வீட்டையே தாங்கி உயர்ந்து நிற்கிறது ஆனால் அந்த வெள்ளை சுவற்றையை பாழ்படுத்தும் விதத்தில் மையத்தில் ஒரு கருப்பு புள்ளி உள்ளது அதை போலத்தான் ஆண் இனத்தை தவறாக சித்தரிக்கவில்லை எந்த தொகுப்பு சுவற்றை பாழ்ப்படுத்தும் அந்த கருப்பு புள்ளியை தான் சுட்டிகாட்டுகிறேன். பெண் குழந்தை பெற்றேடுத்த ஒவ்வொரு பெற்றோரும் தினம்தினம் பதபதைத்து கொண்டு நாளை கடத்துகின்றனர்  என்பதே இன்றைய நிதர்சனம் என்பது உண்மையா இல்லையா?… என்று நீங்களே இவர்களின் மனகுழுறலுக்கு உள்ளத்தில் இருந்து விடை ?

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்