கொரோனா முன்னெச்சரிக்கை.! பெங்களூரு விமனநிலைத்தில் தீவிர பரிசோதனை…
பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி, பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இதில், அறிகுறி உள்ள பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிகுறி இல்லாத பயணிகள் தங்களை சுயமாக கண்காணித்து கொள்ள வேண்டும் எனவும் விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இதில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கொரோனா அறிகுறியற்றவர்கள் என கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.