சர்வதேச தினை ஆண்டு; தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடி.!

Default Image

பூசாவில் நடைபெற்ற உலகளாவிய தினை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தபால் தலை மற்றும் அதிகாரப்பூர்வ நாணயத்தை வெளியிட்டார்.

coins millets post

டெல்லியின் பூசாவில் உலகளாவிய தினை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பூசாவில் இன்று நடைபெற்ற உலகளாவிய தினை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச தினை ஆண்டு 2023க்கான அதிகாரப்பூர்வ நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.

pmmodi millets23

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச தினை ஆண்டை இந்தியா முன்னெடுத்துச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன். உலகளாவிய தினை மாநாடு போன்ற நிகழ்வுகள் உலகளாவிய நன்மைக்கு அவசியமானவை மட்டுமல்ல, அவற்றிற்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்பின் அடையாளமும் கூட என்று கூறினார்.

இது குறித்து பிரதமர் மேலும் கூறியதாவது, இந்தியாவின் முன்மொழிவு மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை 2023 ஐ ‘சர்வதேச தினை ஆண்டாக’ அறிவித்தது எங்களுக்கு மிகவும் மரியாதைக்குரிய விஷயம். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று இந்த விழாவில் எங்களுடன் கலந்துகொண்டுள்ளது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்