சர்வதேச விமான சேவை பிப்ரவரி 28 வரை ரத்து ….!
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை மத்திய அரசு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வரை நீடித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது சர்வதேச பயணிகளுக்கான விமான சேவையை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 28 ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமான சேவைக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
— DGCA (@DGCAIndia) January 19, 2022