சர்வதேச விமான போக்குவரத்து இயல்பான நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்
சர்வதேச விமான போக்குவரத்து இயல்பான நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் ஆகும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தீவிர பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், வான் வழி மற்றும் தரை வழி போக்குவரத்துகள் அனைத்தும் றது செய்யப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவும் விமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து சேவை கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலையை அடைய குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.