BREAKING: Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவை தள்ளிவைப்பு- டி.ஜி.சி.ஏ. அறிவிப்பு …!
Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானங்கள் டிசம்பர் 15 முதல் தொடங்கப்படாது என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.
டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இது குறித்து டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கும். கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் வெளிப்படுவதைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
தற்போது, டிசம்பர் 15 முதல் சர்வதேச விமானங்கள் தொடங்கப்படாது. சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்த தேதியில் முடிவு எடுக்கப்படும். முன்னதாக, டிசம்பர் 15 முதல் வணிகரீதியான சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதார-குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதற்குப் பிறகு, இந்தியாவிற்கும் செல்லும் வர்த்தக சர்வதேச பயணிகள் சேவைகளை 15 டிசம்பர் 2021 முதல் மீண்டும் தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
— DGCA (@DGCAIndia) December 1, 2021