புதிதாக திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோ இணையத்தில் வைராகிவருகிறது.
வரும் மே 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்பட இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பல மத பிரார்த்தனையுடன் தொடங்குகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழாவை புறக்கணிக்க 20 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோவை, பிரதமர் மோடி தனது ட்விட்டரில், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வைக்கும் புதிய பாராளுமன்ற கட்டிடம் என பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக மோடி, ஒரு சிறப்பு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். அதாவது உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடீயோவை உங்கள் சொந்த குரல் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். #MyParliamentMyPride என்ற ஹாஷ்டேக் பயன்படுத்துமாறும் பிரதமர் மோடி இந்த பதிவில் கூறியுள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…