அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் இடைக்கால தடை!!
அரவிந்த் கெஜ்ரிவால்: நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்த நிலையில், தற்போது ஜாமீன் வழங்க இடைக்கால தடைவிதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.
நேற்று விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் அப்போது 48 மணி நேரம் அவகாசம் கேட்டிருந்தனர் அதனை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி மறுத்து ஜாமீன் வழங்கியிருந்தார்,
மேலும், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளித்த ஜாமீனை நிறுத்தி வைப்பதாக காலையில் உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளதாக அமலுக்கத்துறை தரப்பில் வாதத்தை முன்வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்ற அளித்த ஜாமீனுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த 3 நாட்களுக்குள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.