ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயரதிமன்றம் இடைக்கால தடை.
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மோடி பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி ‘அனைத்து மோடிகளும் திருடர்கள்’ என்ற கருத்துக்காக பிரதீப் மோடி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருந்தார்.
இதனிடையே, குஜராத்தில் ஒரு தனி வழக்கில் ராகுல் காந்தி சட்டரீதியான விளைவுகளை சந்தித்துள்ளார். பிரதமர் மோடியின் குடும்பப் பெயரை பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், அவரது வயநாடு மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…