காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பதவி விலகல்?

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில், 5 முன்னாள் முதலமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தற்போது உள்ள எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்து வந்தார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். தற்போது சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதிவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக மீண்டும் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025